தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

குடியுரிமைத் திருத்தச் சட்டம்: தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர், பல்வேறு கட்சியினர் தொடர் போராட்டங்களை புதன்கிழமை நடத்தி வருகிறார்கள். 

News image
Updated On :19 பிப்ரவரி 2020, 11:12 am

DIN

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர், பல்வேறு கட்சியினர் தொடர் போராட்டங்களை புதன்கிழமை நடத்தி வருகிறார்கள். மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

Story image

சென்னையில் சட்டப்பேரவை வளாகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துத் திரண்ட இஸ்லாமியர்கள். 

சென்னையில் வாலாஜா சாலை மார்க்கமாக தமிழக சட்டப்பேரவை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்த பேரணியாகச் சென்ற இஸ்லாமிய அமைப்பினர்.

Story image

திருச்சியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி ஜமாத்துல் உலமா மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.வெஸ்டரி பள்ளியில் இருந்து பேரணியாக புறப்பட தயாராகினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அனுமதி மறுத்தனர்.

இதையடுத்து வாகனங்களில் சென்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தேசியக் கொடியை கையில் ஏந்தி சிஏஏ சட்டத்திற்கு எதிராக கோஷமிட்டனர். கடந்த 2 நாள்களாக 1000த்திற்கும் மேற்பட்டோர் உழவர் சந்தை மைதானத்தில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Story image

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் கோவை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

Story image

அப்போது பாதுகாப்பில் அதிவிரைவு படையினர் மற்றும் காவல்துறையினர் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Story image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இஸ்லாமிய கூட்டமைப்பினர் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமுமுக, முஸ்லிம் லீக் தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட கட்சிகள், இஸ்லாமிய கூட்டமைப்பினர் திரளாக கலந்து கொண்டனர்.

Story image

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுள்ள ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், சிசிஏ சட்டத்திற்கு எதிராக கோஷமிட்டனர்.

Story image

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இஸ்லாமியர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

Story image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதால் திருக்கோகர்ணம் மியூசியம் பகுதியிலேயே போக்குவரத்து திருப்பி விடப்பட்டு பழனியப்பா முக்கம் வழியாக பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.