பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கோவை கிருஷ்ணா கல்லூரியில் பொருளாதாரம் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு

வணிகவியல் துறையில் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தினை எப்படி 2024க்குள் அடைவது என்பதை குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு கோவை கிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்றது.

News image
Updated On :20 பிப்ரவரி 2020, 8:28 am

DIN

வணிகவியல் துறையில் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தினை எப்படி 2024க்குள் அடைவது என்பதை குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு கோவை கிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்றது.

வணிகவியல் சார்ந்த படிப்புகள் அதன் தேவையும் நவீன உலகில் அதிகரித்து கொண்டே காணப்படுகின்றது. வணிகவியல் மூலம் வியாபாரத்தையும் அதன் துணைப்பணிகளான போக்குவரத்து, வங்கியியல், காப்பீடு, பண்டகக் காப்பகம், தகவல்தொடர்பு, விளம்பரம் போன்ற பிற நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதாக இருந்து வருகிறது.

இதில் வணிகவியல் துறைகள் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தினை எப்படி 2024க்குள் அடைவது என்பதை குறித்து கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் வணிகவியல் துறை படிக்கும் மாணவர்களுக்கான தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக புனேவில் உள்ள இன்டஸ் மேலாண்மை கல்லூரியின் பொது இயக்குனர் நாராயணா மற்றும் ரூட்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிதி அலுவலர் ரவி கலந்து கொண்டு மாணவர்களிடடையே வணிகத்துறை குறித்து பேசினர்.

மேலும் 345 ஆராய்ச்சி கட்டுரைகளை ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், தொழில் நிறுவனத்தினர் கருத்தரங்கில் சமர்ப்பித்தனர். இதில் கல்லூரியின் அறங்காவலர் மலர்விழி, முனைவர். சுந்தரராமன், முதல்வர் பேபி சகிலா, வணிகவியல் துறை தலைவர்கள் அன்பு மலர், சந்தான லக்ஷ்மி, விஜிமோல், சிவகுமார், தனலட்சுமி, ரீனா உள்ளிட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.