திருச்சி முக்கொம்பில் புதிய கதவணை கட்டும் பணி: முதல்வர் பழனிசாமி ஆய்வு
திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றில் ரூ.387 கோடி மதிப்பீட்டில் புதிய கதவணை கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.












