தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

களியக்காவிளை ஊராட்சி ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைப்பு

கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் ஊராட்சி ஒன்றிய 9 ஆவது வார்டுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  

News image
Updated On :2 ஜனவரி 2020, 7:45 am

DIN

கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் ஊராட்சி ஒன்றிய 9 ஆவது வார்டுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் கடந்த டிச. 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைப்பெற்றது. தொடர்ந்து இன்று வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை மேல்புறம் ஊராட்சி ஒன்றிய 9 ஆவது வார்டுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  

இந்த வார்டில் அமமுக வேட்பாளர் ராஜன் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் தேர்தலுக்கு முந்தைய நாள் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் ராஜனின் பெயர் நீக்கம் செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து வேட்பாளர் ராஜன், மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் செய்தார். இதனடிப்படையில் மேற்படி ஊராட்சி ஒன்றிய வார்டுக்கான வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.