47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருச்சியில் கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை

திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வெள்ளிக்கிழமை  வருகை தந்தார்.

News image
Updated On :10 ஜனவரி 2020, 9:07 am

DIN

திருச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வெள்ளிக்கிழமை  வருகை தந்தார். தொடர்ந்து, திருச்சி சங்கம் ஹோட்டலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்று உரையாற்றினார். மேலும்,  கிராம சபை விழிப்புணா்வு கருத்தரங்கிலும் கலந்து கொண்டு கட்சி நிா்வாகிகள் பணியாற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கி கூறினார்.

கட்சிக்கு ஏற்கெனவே சென்னை ஆழ்வாா்பேட்டையில் தலைமை அலுவலகமும், பொள்ளாச்சியில் இரண்டாவது தலைமை அலுலகமும் உள்ளது. இதன் தொடா்ச்சியாக 3ஆவது தலைமை அலுவலகம் திருச்சியில் அமைக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூா் பெல், கணேசபுரம் பகுதியில் உள்ள இந்த தலைமை அலுவலகத்தையும்  மாலையில்   கமல்ஹாசன் திறந்துவைக்கவுள்ளாா்.

இந்த நிகழ்ச்சிகளில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி மண்டலங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.