பொங்கல் திருநாள்: சென்னையிலிருந்து 4.53 லட்சம் பேர் வெளியூர் பயணம்
பொங்கல் திருநாளையொட்டி சென்னையில் இருந்து இதுவரை 4.53 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இதுவரை 4.53 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை முதல் (ஜன.10) முதல் ஜன.14-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துத் துறை சாா்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதன் தொடா்ச்சியாக தமிழகம் முழுவதும் ஜன.10 முதல் 14-ஆம் தேதி வரை, 30 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி, ஜன.10ம் தேதி முதல் இன்று காலை 8 மணி வரை சுமார் 9 ஆயிரம் பேருந்துகள் மூலம் சென்னையில் இருந்து இதுவரை 4.53 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...