ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

'மன்னிப்புக் கேட்க முடியாது': தேசிய அளவில் டிரெண்டாகும் டிவிட்டர் ஹேஷ்டேக்

பெரியார் குறித்து பேசிய விவகாரத்தில் மன்னிப்புக் கேட்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருப்பது, டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

News image
Updated On :21 ஜனவரி 2020, 9:58 am

DIN


பெரியார் குறித்து பேசிய விவகாரத்தில் மன்னிப்புக் கேட்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருப்பது, டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

அண்மையில் நடைபெற்ற துக்ளக் வார இதழின் பொன் விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து, பெரியார் குறித்து தவறாக பேசியதற்காக ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்க வேண்டும், வருத்தம் தெரிவிக்க வேண்டும் என திராவிட இயக்கத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று (செவ்வாய்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், "நான் இல்லாத ஒன்றைப் பேசவில்லை. நான் பேசியது உண்மைதான். எனவே மன்னிப்புக் கேட்க முடியாது, வருத்தம் தெரிவிக்க முடியாது. இது மறுக்க வேண்டிய விஷயம் அல்ல, மறக்க வேண்டிய விஷயம்" என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, "மன்னிப்புக் கேட்க முடியாது" என ரஜினிகாந்த் தெரிவித்திருப்பது தற்போது டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. இதுதவிர ரஜினிகாந்த் எனும் ஹேஷ்டேக்கும் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.