ரஜினி விஷயத்தில் முதல்வர் சரியான முடிவை எடுப்பார்: அமைச்சர் கே.சி. கருப்பணன்

ரஜினிகாந்த் விஷயத்தில் முதல்வர் சரியான முடிவை எடுப்பார் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஈரோடு: ரஜினிகாந்த் விஷயத்தில் முதல்வர் சரியான முடிவை எடுப்பார் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு இன்று (புதன்கிழமை) அளித்த பேட்டி:

மத்திய அரசு தொழில் வகைகளை 'ஏ' மற்றும் 'பி' என இரு பிரிவுகளாகப் பிரித்துள்ளது. இதில் 'ஏ' பிரிவில் உள்ள தொழில்களை மேற்கொள்ளும் போது பொதுமக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என அரசாணை உள்ளது. இந்நிலையில் தற்போது, எண்ணெய் கிணறு தோண்டும் தொழிலை 'பி' கிரேடுக்கு அரசு மாற்றி விட்டதால், பொதுமக்கள் கருத்துக் கேட்க வேண்டியதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த திட்டத்தைக் கொண்டு வர அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி பெற வேண்டும். இந்த துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அதனால் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த திட்டமாக இருந்தாலும் அரசு அதனை தடுத்து நிறுத்தும்.

சாயக்கழிவு பிரச்னையைப் பொறுத்தவரை திருப்பூரில் உள்ளது போல் பூஜ்ய முறை சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்த ஈரோட்டில் 5 இடங்கள், பவானியில் 2 இடங்கள் என மொத்தம் 7 இடங்களில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்திற்கு மத்திய அரசு 50 சதவீத மானியம் வழங்கும். 25 சதவீத மானியம் மாநில அரசு வழங்கும். மீதமுள்ள 25 சதவீதத்தை சாய ஆலை நடத்துவோர் செலுத்தவேண்டும். அவர்கள் அதனைச் செலுத்த முடியாத நிலையில் உள்ளதால், சுற்றுச்சூழல் துறை சார்பில் அந்த தொகையை வட்டியில்லாக் கடனாகக் கொடுத்து பூஜ்ய முறை சுத்திகரிப்பு திட்டத்தை செயல்படுத்தவுள்ளோம். 

திருப்பூரைப் போல் ஒரு சொட்டு கழிவுநீர் கூட வெளியேறாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த திட்டம் முதல்வரின் ஒப்புதலுக்காக வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் விரைவில் அதற்கு ஒப்புதல் வழங்குவார்.

ரஜினிகாந்த் பேச்சு எடுபடப்போவதில்லை, அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இந்த விஷயத்தில் முதல்வர் சரியான முடிவை எடுப்பார்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com