தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ஈரோடு நம்பியூரில் மத நல்லிணக்க குடியரசு தின விழா

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அல் ஹிதாயா மஸ்ஜித் சுன்னத் ஜமாதில் மத நல்லிணக்க குடியரசு தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

News image
Updated On :26 ஜனவரி 2020, 7:31 am

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அல் ஹிதாயா மஸ்ஜித் சுன்னத் ஜமாதில் மத நல்லிணக்க குடியரசு தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  விழாவிற்கு பள்ளிவாசல் தலைவர் ரஷீத் அலி தலைமை தாங்கினார். 

கிறிஸ்துவ சபை பாதிரியார்கள் டேவிட் ராஜா, ஆண்ட்ரூஸ், ஜெபஸ்டின், நம்பியூர் ஈஸ்வரன் கோவில் அறங்காவலர் ரத்தினசாமி, நம்பியூர் வர்த்தக சங்கத் தலைவர் லிங்கராஜ், செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்துல் வாஹித் ஹாஜியார் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.  தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்டது. கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

விழாவில் நம்பியூர் அரிமா சங்க நிர்வாகிகள் மயில்சாமி, சதீஷ், நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் லட்சுமணன், நம்பியூர் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.