வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மகாராஷ்டிரத்தில் இன்றும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி

மகாராஷ்டிரத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 5,537 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
மகாராஷ்டிரத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 5,537 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
Updated On :1 ஜூலை 2020, 4:24 pm

DIN


மகாராஷ்டிரத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 5,537 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் பற்றிய இன்றைய அறிவிப்பை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 5,537 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 198 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,80,298 ஆக உயர்ந்துள்ளது. இதில் 79,075 பேர் சிகிச்சையில் உள்ளனர். 93,154 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 8,053 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.