வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கடையத்தில் ரூ.4.66 கோடியில் கரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்புத் திட்டம்

கடையம் மற்றும் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 46 ஊராட்சிகளில் கரானா சிறப்பு நிதி உதவித் திட்டத்தின் மூலம் ரூ.4.66 கோடியில் நிதி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

News image
Updated On :1 ஜூலை 2020, 9:54 am

DIN

தென்காசி மாவட்டம் கடையம் மற்றும் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 46 ஊராட்சிகளில் கரானா சிறப்பு நிதி உதவித் திட்டத்தின் மூலம் ரூ.4.66 கோடியில் 2341 பயனாளிகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி கடையத்தில் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு உலக வங்கி நிதி உதவியுடன்  ஊரகத் தொழில்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல், வருமானத்தைப் பெருக்குதல் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்படும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் தென்காசி மாவட்டம் கடையம் மற்றும் கீழப்பாவூர் ஆகிய இரண்டு வட்டாரங்களில் 46 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் திட்ட ஊராட்சிகளில் சுய உதவிக் குழு உறுப்பினர் மற்றும் உறுப்பினர் குடும்பங்களைச் சார்ந்தவர்களால் நடத்தப்பட்டு, கரோனோ வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஊரகத் தொழில்கள் மேம்படுத்துவதற்காகவும், மாற்றுத் திறனாளிகள் மற்றும் நலிவுற்றோரால் மேற்கொள்ளப்படும் வாழ்வாதாரத் தொழிலை மேம்படுத்துவதற்காகவும், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், தொழில் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்புகளில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் தொழில்களின் மூலம் வளமும் வலிமையும் பெறுவதற்காகவும் பிற பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்களுக்கு புதிய தொழில் தொடங்கவும் தென்காசி மாவட்ட தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தில் ரூ.4.66 கோடியில் கரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்புத் திட்டம் மூலம் தென்காசி மாவட்டத்தில் 2341 பயனாளிகள் பயன்பெறக்கூடிய வகையில் காரணம் சிறப்பு நிதி உதவி தொகுப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது. 

கடையம் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் நடைபெற்ற திட்டத் தொடக்க விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி 20 பயனாளிகளுக்கு நிதி உதவிக்கான காசோலைகளை வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட செயல் அலுவலர் முத்தமிழ்செல்வன், நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பிரபாகரன், மாநகர் மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா. மற்றும் வருவாய்த்துறை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.