புதுக்கோட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பிரேத பரிசோதனை மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பிரேத பரிசோதனை மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினரின் 7 வயது சிறுமி வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனார். அருகில் உறவினர்கள் வீட்டிற்கு சென்றிருப்பார் என பெற்றோர்கள் நினைத்த நிலையில், இரவு நேரமாகியும் சிறுமி வீட்டிற்கு வரவில்லை.
இதையடுத்து பெற்றோர்கள், உறவினர்கள் சிறுமியைத் தேடினர். சிறுமி கிடைக்காத நிலையில் காவல்துறையில் புகார் அளித்தனர்.
பின்னர் போலீஸார் தீவிரமாக தேடி வந்தநிலையில், மோப்ப நாயின் உதவியுடன் நேற்று சிறுமியின் உடலை கண்டறிந்தனர். கிராமத்திற்கு அருகே கருவேல மரங்கள் நிறைந்த பகுதியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது .
தொடர்ந்து, சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக ராஜேஷ் என்பவரை கைது செய்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது. மேலும் ஒருவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வழக்கில் சிறுமிக்கு நீதி கேட்டு நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...