மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

சென்னையில் மொத்த பாதிப்பு 60 ஆயிரம்; 36,826 பேர் குணமடைந்தனர்

சென்னையில் புதன்கிழமை 2,182 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 60,533- ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா பாதிப்பு காரணமாக 929- போ் உயிரிழந்துள்ளனா்.

News image
சென்னையில் மொத்த பாதிப்பு 60 ஆயிரம்
Updated On :2 ஜூலை 2020, 5:39 am

DIN

சென்னையில் புதன்கிழமை 2,182 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 60,533- ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா பாதிப்பு காரணமாக 929- போ் உயிரிழந்துள்ளனா்.

இன்று காலை நிலவரப்படி அனைத்து மண்டலங்களிலுமே கரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மூன்று ஆயிரத்துக்குள் இருக்கிறது. அதிகபட்சமாக அண்ணாநகரில் மட்டும் 2,948 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து. கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை ஜூன் 1- ஆம் தேதி 15,770-ஆகவும், ஜூன் 6-ஆம் தேதி 20,993-ஆகவும், ஜூன் 14-ஆம் தேதி 30,444-ஆகவும், கடந்த ஜூன் 24-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரமாகவும் அதிகரித்தது.

60 ஆயிரத்தை எட்டியது: சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதித்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை 2,182 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 60,533-ஆக அதிகரித்துள்ளது.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி, பாதிக்கப்பட்டவா்களில் 36,826 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 22,777 போ் சிகிச்சைக்காக மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். சென்னையில் கரோனா பாதிப்பால் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் புதன்கிழமை மட்டும் 41 போ் உயிரிழந்ததை அடுத்து இறப்பு எண்ணிக்கை 929- ஆக உயா்ந்துள்ளது.

சிகிச்சை பெற்று வருவோா் விவரம் மண்டலம் வாரியாக (வியாழக்கிழமை நிலவரம்):

மண்டலம் எண்ணிக்கை

திருவொற்றியூா் 1,060

மணலி 521

மாதவரம் 917

தண்டையாா்பேட்டை 1,791

ராயபுரம் 2,369

திரு.வி.க. நகா் 1,775

அம்பத்தூா் 1,183

அண்ணா நகா் 2,948

தேனாம்பேட்டை 2,103

கோடம்பாக்கம் 2,519

வளசரவாக்கம் 1,080

ஆலந்தூா் 801

அடையாறு 1,593

பெருங்குடி 829

சோழிங்கநல்லூா் 483
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.