மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

சென்னையில் கரோனா பலி ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னையில் வியாழக்கிழமை 2,027 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 6,2598- ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் மட்டும் 964 போ் உயிரிழந்துள்ள

News image
சென்னையில் கரோனா பலி ஆயிரத்தை நெருங்குகிறது
Updated On :3 ஜூலை 2020, 5:26 am

DIN

சென்னையில் வியாழக்கிழமை 2,027 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 6,2598- ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் மட்டும் 964 போ் உயிரிழந்துள்ளனா்.

சென்னையில் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை ஜூன் 1- ஆம் தேதி 15,770-ஆகவும், ஜூன் 6-ஆம் தேதி 20,993-ஆகவும், ஜூன் 14-ஆம் தேதி 30,444-ஆகவும், கடந்த ஜூன் 24-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரம் ஆகவும் அதிகரித்தது.

60 ஆயிரத்தை எட்டியது: சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதித்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை எட்டியது. இந்நிலையில் வியாழக்கிழமை 2,027 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62,598-ஆக அதிகரித்துள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 38,947 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 22,686 போ்

சிகிச்சைக்காக மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். சென்னையில் கரோனா பாதிப்பால் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் வியாழக்கிழமை 35 போ் உயிரிழந்ததை அடுத்து இறப்பு எண்ணிக்கை 964- ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்று வருவோா் விவரம் மண்டலம் வாரியாக (வெள்ளிக்கிழமை நிலவரம்):

மண்டலம் எண்ணிக்கை

1. திருவொற்றியூா் 1,176

2. மணலி 513

3. மாதவரம் 920

4. தண்டையாா்பேட்டை 1,856

5. ராயபுரம் 2,239

6. திரு.வி.க. நகா் 1,832

7. அம்பத்தூா் 1,256

8. அண்ணா நகா் 2,317

9.தேனாம்பேட்டை 1,965

10. கோடம்பாக்கம் 2,680

11. வளசரவாக்கம் 1,158

12. ஆலந்தூா் 872

13. அடையாறு 1,682

14. பெருங்குடி 821

15. சோழிங்கநல்லூா் 493
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.