
நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எட்டுக்குடி, திருக்குவளை மடப்புரம், வாழக்கரை, கருங்கண்ணி, சோழவித்தியாபுரம், சின்னத்தும்பூர், மற்றும் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். திருக்குவளை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கிளைத்தலைவர் திருமலைக்குமார் மற்றும் உறுப்பினர்களான வேம்பு நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஊரடங்கு வேலை இழப்பு வாழ்வாதார நிதியாக மாதந்தோறும் ஆயிரம் வழங்க வேண்டுமெனவும் 100 நாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நான்கு மணிநேர வேலையும் முழு ஊதியமும் வழங்கிடவும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் எனவும் 100 நாள் வேலையில் இருநூறு நாளாக உயர்த்தி தர வேண்டியும் அனைத்து சமூகப் பாதுகாப்பு திட்டங்களில் மற்றவர்களைவிட மாற்றுத்திறனாளிகளுக்கு 25% கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.