47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அனைத்து வசதிகளுடன் கிண்டியில் கரோனா சிகிச்சை மையம்: முதல்வர் தொடக்கி வைத்தார்

சென்னையில், கரோனா பாதித்த நோயாளிகளுக்காக அனைத்து வசதிகளுடன் ரூ.127 கோடி மதிப்பில் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய கோவிட் சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.

News image
அனைத்து வசதிகளுடன் கிண்டியில் கரோனா சிகிச்சை மையம்: முதல்வர் தொடக்கி வைத்தார்
Updated On :7 ஜூலை 2020, 1:12 pm

DIN

சென்னையில், கரோனா பாதித்த நோயாளிகளுக்காக அனைத்து வசதிகளுடன் ரூ.127 கோடி மதிப்பில் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய கோவிட் சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருப்பதாவது, தமிழக அரசு, முதல்வர் பழனிசாமியின் தலைமையில் பல்வேறு கரோனா நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் விதமாக சென்னை கிங் இன்ஸ்ட்டியுட் வளாகத்தில் ரூ.127 கோடி பொருட் செலவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தினை கோவிட் சிகிச்சை மையமாக மாற்ற தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, இம்மையம் 750 படுக்கை வசதிகள் கொண்ட கோவிட் சிகிச்சை மையமாக தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது. இவற்றுள் ஆக்சிஜன் வசதியோடு கூடிய 300 படுக்கை வசதிகளும், 60 படுக்கை வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவும் அடங்கும். இம்மையத்தில் 16 கூறு சி.டி.ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், எக்கோ கார்டியாகிராம், 6 நடமாடும் எக்ஸ்-ரே கருவிகளும், 28 வெண்டிலேட்டர்கள், 40 உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவிகள், 10 நடமாடும் ஆக்சிஜன் வழங்கும் கருவிகள் ஆகியவைகள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயலாற்றி வருகிறது. 

மேலும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வசதிகளுடன் 80 மருத்துவர்கள், 100 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். உலகத்தரம் வாய்ந்த இம் மருத்துவமனையை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று பொது மக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்து உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகம் முழுவதும் 95 கரோனா ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு தினமும் 35 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா பாதித்த 58 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கரோனா நோயாளிகளுக்காக சுமார் 75 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் சமூகப் பரவலாக மாறவில்லை என்றும் முதல்வர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.