டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தமிழ்நாட்டில் நீர் மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்படுத்தியதால் தண்ணீர் பஞ்சம் இல்லை: ஆர்.காமராஜ்

மாநிலத்தில் நீர் மேலாண்மை திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதால் விவசாயப் பணிக்கும், குடிநீர்த் தேவைக்கும் தண்ணீர் பஞ்சம் ஏற்படவில்லை என்றார் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ்.

News image
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.காமராஜ்
Updated On :27 ஜனவரி 2024, 4:55 pm

DIN

தமிழக முதல்வர் தொலை நோக்கு பார்வையுடன், மாநிலத்தில் நீர் மேலாண்மை திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதால் விவசாயப் பணிக்கும், குடிநீர்த் தேவைக்கும் தண்ணீர் பஞ்சம் ஏற்படவில்லை என்றார் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள உள்ளிக்கோட்டையில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், வியாழக்கிழமை ஆய்வு செய்த பின்,

அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியது..

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து இருந்த நிலையல்,தமிழக அரசு எடுத்த தீவிர தடுப்பு நடவடிக்கையின் காரணமாக,நோய்த் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்து இதுவரை 62 சதவீதம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.இறப்பு என்பது வெறும் 1.37 சதவீதம் மட்டும்தான்.மக்கள் முகக்கவசம் அணிவது,கைகளைக் கழுவது,தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவற்றை முழுமையாகச் செயல்படுத்தினால், கரோனா தொற்றிலிருந்து முழுமையாக விடுபடலாம்.

மார்ச் மாதம் பொதுமுடக்கம் அறிவித்து பத்து நாள்களிலேயே விவசாயத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டு,தடையின்றி விவசாயப் பணிகள் நடைபெற்று வருகிறது.பொதுமுடக்கம் நூறு நாள்களைக் கடந்த நிலையில்,மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழக்கக் கூடாது என்பதற்காகத்தான், வல்லுநர் ஆய்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும்,மொத்தம் 521அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம்,இதுவரை26.24 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.நுகர்பொருள் வாணிபக்கழக வரலாற்றில் இது ஒரு மைல் கல் ஆகும்.செப்டம்பர் இறுதிக்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 28 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்வது என்பது உறுதியாகி விட்டது.

கோடை சாகுபடியில்,இந்த சாதனை செய்ய காரணமாக அமைந்தது,தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் நீர் மேலாண்மை திட்டம் என்ற தொலை நோக்கு பார்வைதான்.மேட்டூர் அணையைத் தூர்வாரியது.குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் தூர்வாரியது.வண்டல் மண் எடுத்தது ஆகியவற்றால் மழைநீர்,ஆற்றுநீர் ஆகியவை சேமிக்கப்பட்டு நீர்நிலைகள் நிறைந்து, நிலத்தடி நீர்மட்டமும் உயர்த்து இருந்தது.இதனால்,தற்போது தமிழ்நாடு முழுவதும் விவசாயப்பணிக்கும்,குடிநீருக்கும் தட்டுப்பாடு இல்லை என்பதால் தண்ணீர் பஞ்சம் என்பது இல்லவே இல்லை.

தடையின்றி மும்முனை முன்சாரம் விநியோகம் செய்யப்பட்டதால்,கோடை குறுவை பணி சிறப்பாகச் செய்யப்பட்டு விளைச்சல் அதிகரித்து,கண்டுமுதல் கிடைத்திருப்பதாக,இந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் என்னிடம் தெரிவித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.

கஜா புயலின் போது, வீடுகளை இழந்த உள்ளிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு 160 வீடுகளுடன் கூடி அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட, ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம் சார்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு,அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.

ஆய்வின் போது, அமைச்சருடன் டிஎன்சிஎஸ்சி முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் எஸ்.புண்ணியக்கோட்டி, ஒன்றிய ஆணையர் எம்.ஜி.கமலராஜன், ஒன்றியக்குழுத் தலைவர் டி.மனோகரன், அதிமுக ஒன்றிய செயலர் கா.தமிழ்ச்செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் ஜி.ஜெயக்குமார், ஊராட்சி தலைவர் ஆர்.ஜோதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.