தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

செய்யூர் இளம்பெண் தற்கொலை விவகாரம்: தேடப்பட்டு வந்த திமுக நிர்வாகி கைது

செய்யூர் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திமுக நிர்வாகி தேவேந்திரநாய் போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். 

News image
கோப்புப்படம்
Updated On :13 ஜூலை 2020, 11:02 am

DIN

செய்யூர் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திமுக நிர்வாகி தேவேந்திரநாய் போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். 

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே கடந்த ஜூன் 24 அன்று சசிகலா என்ற இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக பெண்ணின் சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திமுக நிர்வாகிகள் தேவேந்திரன், புருஷோத்தமன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தவழக்கில் புருஷோத்தமன் தாமாகவே வந்து காவல்துறையிடம் சரணடைந்தார். தொடர்ந்து தலைமறைவான தேவேந்திரனை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று சென்னை வியாசர்பாடி பகுதியில் வைத்து தேவேந்திரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

முன்னதாக, தேவேந்திரன் மற்றும் புருஷோத்தமன் ஆகிய இருவரும் இணைந்துதான் சசிகலாவை தூக்கில் தொங்க விட்டதாக சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதற்கிடையே, தேவேந்திரன் மற்றும் புருஷோத்தமன் ஆகிய இருவரும் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.