சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சுதா தாக்கல் செய்த பொது நல மனுவில், கரோனா நோய்த் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், நோய்த் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள
சத்தான மற்றும் ஊட்டச்சத்து அதிகமாக உள்ள உணவை உட்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் அறிவுறுத்தியுள்ளன. எனவே, தமிழகத்தில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச முட்டைகள் வழங்க வேண்டும். மேலும், ஏழை எளிய மாணவர்களுக்கு சத்துணவு வழங்க உரிய திட்டம் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.