இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை: மயானத்துக்கு பாதை கேட்டு கிராம மக்கள் போராட்டம்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மயானத்துக்கு பாதை கேட்டு கிராம மக்கள் வெள்ளிக்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மயானத்துக்கு பாதை கேட்டு கிராம மக்கள் வெள்ளிக்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இளையான்குடி வட்டம் கண்டனி கிராமத்தில் உள்ள பொது மயானத்துக்கு பாதை இல்லாததால் கிராம மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். தனியார் நிலத்தில் உள்ள பாதையை கிராம மக்கள் மயானத்துக்கு சடலங்ளை எடுத்துச் செல்ல பயன்படுத்தி வருவதால் நிலத்துக்கு சொந்தக்காரர் தனது நிலத்தில் பாதை கொடுக்க மறுத்து வருகிறார்.
இதையடுத்து கண்டனி கிராம மக்கள் தங்களது கிராமத்தின் மயானத்துக்கு அரசுத் தரப்பில் பாதை அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் திரண்டு வந்து இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து போலீஸார், அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...