ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அக்கமாபேட்டை அரசு பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்கல்

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள அக்கமாபேட்டை அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கிய உலர் உணவுப் பொருள்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றன. 

News image
அக்கமாபேட்டை அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவுப்பொருள்களை வழங்கினார் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா.
Updated On :20 ஜூலை 2020, 11:13 am

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள அக்கமாபேட்டை அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கிய உலர் உணவுப் பொருள்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றன. 

சங்ககிரியை அடுத்துள்ள அக்கமாபேட்டை அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் 169 மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கிய உலர் உணவுப் பொருள்களான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்களை மாநில சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்ட அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா வழங்கினார்.

விழாவிற்கு முன்னர் அப்பகுதியில் குழுமியிருந்த பொதுமக்களிடத்தில் கரோனா தொற்று பாதுகாப்பிலிருந்து பொதுமக்கள், குழந்தைகளை தற்காத்து கொள்வது குறித்தும், முககவசம் அணியும் முறைகள் பற்றியும் விளக்கிக் கூறினார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கே.நடராஜ் இவ்விழாவிற்கு தலைமை வகித்தார். 

தலைமையாசிரியைகள் உயர்நிலைப்பள்ளி நிகிலா, தொடக்கப்பள்ளி இந்திராகாந்தி,  ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏ.கே.முனியப்பன், சமூக ஆர்வலர் பசுமை சீனிவாசன், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் முருகன், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் இதில் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.