சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அமுதா, ஐ.ஏ.எஸ்.க்கு முதல்வர் வாழ்த்து

பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அமுதா. ஐ.ஏ.எஸ்.க்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

News image
அமுதா ஐஏஎஸ்
Updated On :21 ஜூலை 2020, 11:15 am

DIN

பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அமுதா ஐ.ஏ.எஸ்.க்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தனது நேர்மையாலும், திறமையாலும் அரசின் நன்மதிப்பையும் மக்களின் அன்பையும் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த திருமதி.அமுதா ஐ.ஏ.எஸ் அவர்கள் பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது பணிசிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!' என்று பதிவிட்டுள்ளார். 

மதுரையைச் சேர்ந்த இவர், 1994 ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் தருமபுரி மாவட்ட ஆட்சியராகவும், உணவு பாதுகாப்புத்துறை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். 

பிரதமர் அலுவலகத்தில் புதிதாக 16 இணை செயலாளர்களை நியமனம் செய்து மத்திய அமைச்சரவையின் பணியாளர் ஆணையர் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த 16 பேரில் அமுதா ஐ.ஏ.எஸ்-ம் இடம்பெற்றுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.