ஊத்தங்கரையில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கல்
ஊத்தங்கரை திமுக மருத்துவர் அணி சார்பில் கபசுரக் குடிநீர், முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.


ஊத்தங்கரை திமுக மருத்துவர் அணி சார்பில் கபசுரக் குடிநீர், முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.
அதிகரித்துவரும் கரோனா பாதிப்பால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை திமுக மருத்துவர் அணி சார்பில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றிய செயலாளர்கள் சாமிநாதன், செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர், நகர செயலாளர் பாபு சிவகுமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு நிர்வாகி அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் மருத்துவர் மாலதி நாராயணசாமி நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கபசுர குடிநீர், முகக்கவசங்களை வழங்கினார். இதில் திமுக நிர்வாகிகள் நகர பொருளாளர் தவுலத் பாஷா, பேரூராட்சி உறுப்பினர் கதிர்வேல், தீபக், தகவல் தொழில்நுட்ப பிரிவு தனிகை குமரன், கிளைச் செயலாளர் வேலு, ஜோக்கர்பாய் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...