நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

புதிய உச்சத்தில் தங்கம் விலை: ஒரு சவரன் 38,776-க்கு விற்பனை

சென்னையில் வியாழக்கிழமை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.592 உயர்ந்து 39 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 

News image
gold rate in chennai
Updated On :23 ஜூலை 2020, 10:14 am

DIN

சென்னையில் வியாழக்கிழமை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.592 உயர்ந்து 39 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 

கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உலகை உலுக்கி வருகின்றது. இந்நிலையில், இதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது. பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை முதலீட்டாளர்கள் எண்ணினா். இதையடுத்து, தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதன்காரணமாக, தங்கத்தின் தேவை உயா்ந்து, விலை நாள்தோறும் உயா்ந்து வந்தது. 

இந்த நிலையில், இன்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.74 உயர்ந்து ரூ.4,847-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.592 உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சமாக 38,776க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் கடும் உயர்வை அடைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.3.50 உயர்ந்து, ரூ.67.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.