சென்னையில் இருந்து கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்குச் செல்வதற்கு நடிகர் ரஜினிகாந்த் இ- பாஸ் எடுத்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் முகக்கவசம் அணிந்த நிலையில் கார் ஓட்டுவது போன்ற ஒரு புகைப்படமும், கேளம்பாக்கத்தில் உள்ள வீட்டில் தனது மகள், மருமகன் மற்றும் பேரனுடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகப் பரவியது.
இதையடுத்து, ரஜினிகாந்த் இ- பாஸ் பெற்று தான் கேளம்பாக்கம் வீட்டுக்குச் சென்றாரா? என்று கேள்வி எழுந்தது. இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கேளம்பாக்கம் செல்ல ரஜினி இ-பாஸ் பெற்றாரா என பின்னர் ஆய்வு செய்து தெரிவிக்கப்படும் என்றார்.

இந்நிலையில் ரஜினிகாந்த், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு இன்று செல்வதற்கு இ-பாஸ் எடுத்துள்ளார்.
மருத்துவக் காரணங்களுக்காக செல்வதாகவும், கார் ஓட்டுநருடன் செல்வதாகவும் அந்த இ- பாஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு இ- பாஸ் வழங்கப்பட்ட தேதியாக நேற்றைய தேதியும் (ஜூலை22) பயண தேதியாக இன்றைய தேதியும் (ஜூலை 23) அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அலசல் ஸ்ரீபெரும்புதூா்... முனைப்பு காட்டும் காங்கிரஸ்; விடாமுயற்சியுடன் அதிமுக!

திருச்செங்கோடு தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று குறைகளைக் கேட்டு நிவா்த்தி செய்வேன்: ஈ.ஆா். ஈஸ்வரன்

எஸ்ஐஆருக்கு நன்றி!

நொய்டாவில் மாணவா் நீரில் மூழ்கி பலி: விசாரணை நடத்த தாய் கோரிக்கை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


