கோவையில் இன்று மாலை முதல் தளர்வற்ற பொதுமுடக்கம்: கடைகளில் குவியும் பொதுமக்கள்
அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் கோவை மாவட்டத்தில் சனிக்கிழமை முன்கூட்டியே பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளதால் காய்கறிச்சந்தைகளில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.


அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் கோவை மாவட்டத்தில் சனிக்கிழமை முன்கூட்டியே பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளதால் காய்கறிச்சந்தைகளில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஞாயிற்றுக் கிழமை தோறும் மாநிலம் முழுவதும் தளர்வற்ற பொது முடக்கம் பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில் கோவையில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை தளர்வற்ற பொது முடக்கம் செயல்படுத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இதனையடுத்து முன்கூட்டியே கோவை மாவட்டத்தில் தளர்வற்ற பொதுமுடக்கம் அமலுக்கு வருவதால் தங்களது வீடுகளுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் கடைகளில் குவிந்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...