தேனியில் மேலும் 2 மருத்துவர்களுக்கு கரோனா
தேனி மாவட்டத்தில் செவ்வாய்கிழமை 2 மருத்துவர்கள், துணை வட்டாட்சியர் உள்ளிட்ட 194 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தேனி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 2 மருத்துவர்கள், துணை வட்டாட்சியர் உள்ளிட்ட 194 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் கூடலூரைச் சேர்ந்த சிறுநீரக நோய் சிறப்பு மருத்துவர், ராசிங்காபுரத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர், டி.சிந்தலைச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக தொழில்நுட்புநர், தேனி டாஸ்மாக் அலுவலக துணை வட்டாட்சியர், காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த அனுமந்தன்பட்டி கிளை அஞ்சலகத்தில் பணியாற்றும் துணை அஞ்சல் அலுவலர், உத்தமபாளையம் அஞ்சல் அலுவலக மேற்பார்வையாளர், கோடாங்கிபட்டியைச் சேர்ந்த பழனிசெட்டிபட்டி மின் வாரிய ஊழியர் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோம்பையைச் சேர்ந்த ராணுவ வீரர், கம்பத்தைச் சேர்ந்த கோம்பை காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர், தேனி காவல் நிலைய தலைமை காவலர், கூடலூர் வடக்கு காவல் நிலைய பெண் காவலர் உள்ளிட்ட 194 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா அறிகுறியுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜூலை 26-ம் தேதி அனுமதிக்கப்பட்ட போடிதாசன்பட்டியைச் சேர்ந்த 60 வயதுடைய பெண், பரிசோதனை முடிவு வெளியாகும் முன்னரே திங்கள்கிழமை உயிரிழந்தார். அவருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சின்னமனூரைச் சேர்ந்த 58 வயதுடைய நபர், கொடுவிலார்பட்டி தனியார் கல்லூரி கரோனா மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த சின்னமனூரைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவர் என 2 பேர் உயிரிழந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...