மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கரோனா பாதிப்பால் தனியார் மண்டபத்திற்கு மாற்றப்பட்ட உடுமலை காவல் நிலையம்

உடுமலையில் காவல் நிலைய தலைமை எழுத்தர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்காலிகமாக ஒரு தனியார் மண்டபத்திற்கு காவல் நிலையம் மார்றப்பட்டது.

News image
உடுமலை காவல் நிலையம்
Updated On :28 ஜூலை 2020, 8:00 am

DIN

உடுமலையில் காவல் நிலைய தலைமை எழுத்தர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்காலிகமாக ஒரு தனியார் மண்டபத்திற்கு காவல் நிலையம் மார்றப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இதுவரை கரோனா தொற்றால் 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் உடுமலை காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமை எழுத்தர் ஜீவானந்தம் (43) என்பவருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதன் காரணமாக காவல்நிலையத்தில் பணியாற்றும் 40க்கும் மேற்பட்ட காவலர்கள் வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி அடிக்கும்பணி நடந்து வருகிறது.

மேலும் காவலர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவல் நிலையம் அருகிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.