புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகமும் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டமும் இணைந்து இன்று அங்கன்வாடி பணியாளர்களுக்கான கொவைட்-19 பெருந்தொற்றுக் காலகட்டத்தில் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் உரிமைகளையும் பாதுகாப்பது எப்படி என்பது குறித்த கருத்தரங்கை காணொலி மூலம் நடத்தியது. இதில் சிறப்புரை ஆற்றிய தமிழ்நாடு அரசு பொதுசுகாதார முன்னாள் இயக்குனர் டாக்டர் க.குழந்தைசாமி, தாய்ப்பால் மூலம் கரோனா வைரஸ் பரவாது என்பதை உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. கரோனா பாதித்த தாய் தனது குழந்தைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாண்டு தாய்ப்பால் கொடுக்கலாம். அதேபோன்று தாய்க்கு இல்லாமல் குழந்தைக்கு மட்டுமே தொற்று இருந்தாலும் தாய்ப்பால் கொடுக்கலாம்.