மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சேலத்தில் தூய்மை பணியாளர்களுக்கு  நோய் தடுப்புப் பொருட்கள் வழங்கல்

சேலத்தில் தன்னார்வலர்கள் இணைந்து தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா நோய் தடுப்புப் பொருட்களை வழங்கினர்.

News image
நோய்த் தடுப்புப் பொருள்களைப் பெற்றுக் கொண்ட தூய்மைப் பணியாளர்கள்
Updated On :30 ஜூலை 2020, 12:23 pm

DIN

சேலத்தில் தன்னார்வலர்கள் இணைந்து தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா நோய் தடுப்புப் பொருட்களை வழங்கினர்.


வாழப்பாடியில் அரிமா சங்கங்கள் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் இணைந்து பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர்,  முககவசங்களும்,  பேரூராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, கையுறை, முககவசம், சோப்பு, ஹோமியோபதி மருந்து உள்ளிட்ட  நோய் தடுப்பு பொருட்களை வியாழக்கிழமை வழங்கின.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அரிமா சங்கம்,
அன்னை அரிமா சங்கம் மற்றும் துளி இயக்கம், நெஸ்ட் அறக்கட்டளை  உள்ளிட்ட தன்னார்வ இயக்கங்கள் இணைந்து,  வாழப்பாடி பேரூராட்சி பிங்கள விநாயகர் கோவில் மற்றும் அக்ரஹாரம் பகுதியில் பொதுமக்களுக்கு, கபசுரக் குடிநீர் மற்றும் முககவசங்கள் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வாழப்பாடி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும்  கையுறைகள், முகக்கவசம், கைகழுவும் சோப்புகள், நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் ஆர்சனிகம் ஆல்பம் 30 சி ஹோமியோபதி மருந்துகள், கபசுரக் குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது.

வாழப்பாடி அரிமா சங்க பட்டயத் தலைவர் சந்திரசேகரன், தலைவர் ஜவகர், 
செயலர்கள் பெரியார்மன்னன், பொன்னம்பலம், பொருளாளர் பன்னீர்செல்வன்,
அன்னை அரிமா சங்க தலைவி புஷ்பா எம்கோ, செயலர் சுதா பிரபு ,பொருளாளர் தேன்மொழி, துளி இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன், கருணைக் கரங்கள் நிர்வாகி செல்விசிவா, பசுமை அறக்கட்டளை நிர்வாகி உதயா பழனிசாமி, அரிமா அறக்கட்டளை தனசேகரன், ஆசிரியர்கள் சிவ.எம்கோ, ஸ்ரீ முனிரத்தினம், ஷபிராபானு, ஜெயந்தி முருகன், மற்றும் புஷ்பலதா ராஜமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.