கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு பணிக்குத் திரும்பிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சிகிச்சை பெற்று குணமடைந்து வெள்ளிக்கிழமை பணிக்குத் திரும்பினார்.


தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சிகிச்சை பெற்று குணமடைந்து வெள்ளிக்கிழமை பணிக்குத் திரும்பினார்.
இவர் ஜூலை மாதம் 15ஆம் தேதியன்று கரோனோ நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது முகாம் அலுவலகத்திற்கு திரும்பி வந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை முதல் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பணிக்கு வந்து அவரது பணிகளைத் தொடங்கினார். காஞ்சிபுரம் எஸ்பி சண்முக பிரியா, சார்ஆட்சியர் எஸ். சரவணன் ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...