பவானி தீயணைப்பு நிலையத்தில் கரோனா விழிப்புணர்வு ஓவியப் போட்டிகள்
பவானி தீயணைப்பு நிலைய வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கான கரோனா வைரஸ் பரவல் தடுப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டிகள் இன்று நடைபெற்றது.


பவானி தீயணைப்பு நிலைய வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கான கரோனா வைரஸ் பரவல் தடுப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டிகள் இன்று நடைபெற்றது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை சார்பில் நடைபெற்ற இப்போட்டிகளை ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் பி.புளுகாண்டி தொடக்கி வைத்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் கே.காந்தி (பவானி), எஸ்.வேலுச்சாமி (பெருந்துறை), எஸ்.ஜேசுதாஸ் (அந்தியூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்று கரோனா வைரஸ் குறித்த ஓவியங்களை வரைந்தனர்.
இப்போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியர் சமூக இடைவெளியோடு அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்கு, ஓவியம் வரையத் தேவையான உபகரணங்கள், பிஸ்கட் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, சிறந்த ஓவியங்களுக்குப் பரிசுகளும், போட்டிகளில் பங்கேற்றோருக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...