8 மாவட்டங்களிலிருந்து 620 தொழிலாளர்கள் ஜார்கண்ட் புறப்பட்டனர்

கரோனா தீநுண்மி அச்சுறுத்தலால் பொது முடக்கம்  அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் கூலி..
8 மாவட்டங்களிலிருந்து 620 தொழிலாளர்கள் ஜார்கண்ட் புறப்பட்டனர்

கரோனா தீநுண்மி அச்சுறுத்தலால் பொது முடக்கம்  அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் கூலி வேலைக்காக தங்கியிருந்த வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். 

அந்த வகையில் திண்டுக்கல், திருச்சி, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் தங்கியிருந்த 620 தொழிலாளர்களை ஜார்காண்ட் மாநிலத்திற்கு அழைத்துச் செல்வதற்காக சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது.

மதுரையிலிருந்து திண்டுக்கல் வழியாக சென்ற அந்த சிறப்பு ரயிலில் ஏற்றுவதற்காக, திருச்சி  மாவட்டத்திலிருந்து 124 பேர், நாமக்கல்லில் இருந்து 226 பேர், சேலத்திலிருந்து 36 பேர், தஞ்சாவூரிலிருந்து 20 பேர், திருவாரூரிலிருந்து 13 பேர், அரியலூரிலிருந்து 31 பேர், புதுக்கோட்டையிலிருந்து  48 பேர் உள்பட 620 பேர் பேருந்து மற்றும் வேன்களில் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு புதன்கிழமை அழைத்து வரப்பட்டனர்.  

2 நாள் பயணத்தின்போது தேவையான உணவுப் பொருள்கள், குடிநீர், குளிர்பானம் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய தொகுப்பு அனைத்து தொழிலாளர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com