அண்ணாமலைப் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் காலமானார்: இரங்கல் கூட்டம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் எம்.ஜி.முத்துக்குமாரசாமி காலமானதை முன்னிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் இரங்கல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் எம்.ஜி.முத்துக்குமாரசாமி காலமானதை முன்னிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் இரங்கல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், தலை சிறந்த அறுவை சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் மற்றும் மருத்துவர் எம்.ஜி.முத்துக்குமாரசாமி. புதன்கிழமை காலமானார்.
தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையிலும் பல்வேறு உயர் பொறுப்புகளிலும் தமிழ்நாடு அறுவை சிகிச்சை நிபுணர்கள் நல சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றிய அன்னாரின் பங்களிப்பு அளப்பரியது. பல்கலைக்கழக முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அவராற்றிய பங்கு போற்றுதலுக்குரியது. அன்னாரின் மறைவை முன்னிட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் வே.முருகேசன் தலைமையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் இரங்கல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மறைந்த எம்.ஜி.முத்துக்குமாரசாமி உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் பதிவாளர் என்.கிருஷ்ணமோகன், துணைவேந்தரின் ஆலோசகர் டாக்டர் என்.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் மற்றும் மருத்துவர் எம்.ஜி.முத்துக்குமாரசாமி அவர்களின் மறைவிற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆசிரியர்கள் ஆசிரியரல்லா பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை பிரிவால் வாடும் அன்னாரது குடும்பத்தினருக்குத் தெரிவித்துக் கொள்வது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...