தேனி மாவட்டம், போடியில் நறுமணப் பொருள் வாரியம் சார்பில் கடந்த மார்ச் 19-ம் தேதிக்குப் பின்னர், புதன்கிழமை ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் தொடங்கியது.
போடியில் பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் 20- தேதி முதல் ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், தேனி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின் பேரில், தற்போது போடியில் மீண்டும் ஏலக்காய் வர்த்தகம் தொடங்கியது.
ஐ.டி.டி.சி.பி., ஏல நிறுவனம் சார்பில் நடைபெற்ற வர்த்தகத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 40 வியாபாரிகள் பங்கேற்றனர். இதில், கேரளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் பங்கேற்க வரவில்லை. சமூக இடைவெளியுடன் வர்த்தகம் நடைபெற்றது.
இந்த வர்த்தகத்தில், மொத்தம் 18,956 கிலோ ஏலக்காய் விற்பனைக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், சராசரி தரம் கிலோ ரூ.1,850.89-க்கும், உயர் தரம் கிலோ ரூ.2,573-க்கும் விற்பனையானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடவுச்சீட்டு கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசு!

பயணம் தாமதமாகும்! திருச்சியில் புறவழிச் சாலை காவிரிப் பாலம் மூடப்பட்டது!
சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் கனமழை!

திருமணத்துக்கு முன் குஷ்பு மகள் அவந்திகா பகிர்ந்த படங்கள்!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



