திமுக பொருளாளராக துரைமுருகன் தொடர்ந்து நீடிப்பார்: ஸ்டாலின் அறிவிப்பு
திமுக பொருளாளராக துரைமுருகன் தொடர்ந்து நீடிப்பார் என கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


திமுக பொருளாளராக துரைமுருகன் தொடர்ந்து நீடிப்பார் என கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 97 வது பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கட்சியின் முக்கிய அறிவிப்பாக, திமுக பொருளாளராக துரைமுருகன் தொடர்ந்து நீடிப்பார் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், துரைமுருகன் கொடுத்த ராஜினாமா கடிதத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் பொதுக்குழுவை கூட்டி பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கரோனா அச்சுறுத்தல், ஊரடங்கு காரணமாக தேர்வு நடத்த முடியாத சூழலால் துரைமுருகனே திமுக பொருளாளராக தொடர்ந்து நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...