டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும்: 10-ம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கக்கோரிய மனு தள்ளுபடி 

பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:44 pm

DIN

மதுரை: பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

மீண்டும் 10-ம் வகுப்புத் தேர்வை ஒத்திவைத்தால் மாணவர்கள் மன உளைச்சளுக்கு ஆளாவார்கள் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்துத் தெரிவித்துள்ளது.

தென்காசியைச் சேர்ந்த கனகராஜ் தாக்கல் செய்த மனுவில், எனது மகன் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளார். தமிழக அரசு ஜூன் 15 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளது.

இத்தேர்வை எழுதவுள்ள மாணவர்களில் 6.3 லட்சம் பேர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பச் சூழலை கொண்டவர்கள்.

இந்நிலையில் பொதுமுடக்கம் காரணமாக  அனைவரும் பொருளாதார, உளவியல் சிக்கல்களை சந்தித்திருக்கும் நிலையில் மாணவர்கள் சரியான முறையில் தேர்வு எழுதுவார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.  மேலும் விடுதிகள் மற்றும் வெளியூர்களில் தங்கிப் பயிலும் மாணவர்களின் நிலை குறித்து சிந்தித்து முடிவெடுக்க அரசு தவறிவிட்டது. 

மேலும் தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுப்பதற்கு முன்பாக கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், ஆசிரியர்கள், மாணவர்களிடம் அரசு ஆலோசித்து முடிவெடுக்கவில்லை.

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வுகள் ஜூலை 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கும் அவர்களின் மனநிலையைக் கருத்தில் கொண்டு தேர்வினை ஒத்திவைக்க வேண்டும்.

எனவே தற்போதைய சூழலையும் மாணவர்களின் உளவியல் சூழலையும் கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை பொதுமுடக்கம் முழுவதுமாக திரும்பப்பெறப்படும் வரை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கி அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சிபிஎஸ்சி தேர்வு குறித்து தில்லி உள்பட அனைத்து மாநிலங்களையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டுமே கரோனா பாதிப்பு அதிகமுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தான் அரசு தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கும்.

தேர்வை தள்ளிப்போடுவது பள்ளி மாணவர்களுக்கான மன அழுத்தத்தை அதிகரிக்கும். ஆகவே அரசின் இந்த முடிவில் தலையிட இயலாது எனக் கூறினர். இதையடுத்து மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.