மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பெரம்பலூர் அருகே கிணற்றில் விழுந்து தாய், மகள் தற்கொலை

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம். வேப்பந்தட்டை அருகே தாயும், மகளும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டது சனிக்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :6 ஜூன் 2020, 9:22 am

DIN

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம். வேப்பந்தட்டை அருகே தாயும், மகளும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டது சனிக்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம் பாடியைச் சேர்ந்தவர் குமார் மனைவி பிரியா (எ) மரியா பிரின்ஸ் (32). இவர்களுக்கு, தருண் (13), தனுஷ்கா (6) ஆகிய குழந்தைகள் இருந்தன. மணிகண்டன் வெளிநாட்டில் வேலைபார்த்து வருவதால், அவரது தாய் செல்லத்துடன் பிரியா தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார். 

இந்நிலையில், கடந்த 3 நாள்களாக பிரியா தனது பெண் குழந்தை தனுஷ்காவுடன் காணவில்லையாம். இதையடுத்து, அவரது உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம். இந்த நிலையில், பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் ஒரு பெண்ணும், குழந்தையும் இறந்து கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது. 

தகவலறிந்த அரும்பாவூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கிணற்றில் கிடந்த உடல்களை மீட்டு மேற்கொண்ட விசாரணையில் காணாமல் போனதாகத் தேடிவந்த பிரியாவும், அவரது குழந்தை தனுஷ்கா என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.