உணவகங்களில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்: ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்

தமிழகம் முழுவதும் நாளை திறக்கப்படவுள்ள உணவகங்களில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என ஓட்டல் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
உணவகங்களில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்: ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்

தமிழகம் முழுவதும் நாளை திறக்கப்படவுள்ள உணவகங்களில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பொதுமுடக்கம் அமலில் இருக்கும் நிலையில், கரோனா தொற்று அதிகம் உள்ளதாக பகுதிகளில் மத்திய, மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. 

இந்நிலையில், ஜூன் 8 முதல் உணவகங்களைத் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில் பொதுமுடக்கம் காரணமாக உணவகங்களில் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக சில செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், உணவகங்களில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை திறக்கப்படும் உணவகங்களில் கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என்று கூறியுள்ளது.

மேலும், குளிர்சாதன வசதியை பயன்படுத்தாமல் உனவகங்கள் திறக்கப்படும்; என்றும் நோய்த்தொற்று அதிகமுள்ள பகுதிகளில் உணவகங்கள் திறக்கப்படாது என்றும் அறிவித்துள்ளது. 

முன்னதாக, உணவகங்களில் இதுநாள் வரை பார்சல்கள் மட்டுமே அளிக்கப்பட்டு வந்த நிலையில் நாளை முதல் உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், உணவகங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com