இந்த வழக்கை நீதிபதிகள் வினீத்கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், அரசு சிறப்பு வழக்குரைஞர் சி.முனுசாமி, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் இளங்கோ, கரோனா நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த தேர்வு நடந்தால் மாணவர்கள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.