சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஆவின் நிறுவனத்தைக் கண்டித்து பாலை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்

ஆண்டிபட்டி அருகே ஆவின் நிறுவனத்தைக் கண்டித்து பாலை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:46 pm

DIN

ஆண்டிபட்டி அருகே ஆவின் நிறுவனத்தைக் கண்டித்து பாலை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர், பிள்ளைமுகன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.  

விவசாயத்திற்கு அடுத்தபடியாக பால் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இங்குக் கறக்கப்படும் பால் கிராமங்களில் செயல்படும்  பால் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு தேனி ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 

கடந்த இரண்டு மாதமாக கரோனா ஊரடங்கு காலத்தில் தேனி ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 31 ரூபாயிலிருந்து 27 ரூபாயாக குறைத்து வழங்கி வருவதாகவும், மேலும் தனியார் நிறுவனங்களிடமிருந்து குறைந்த விலைக்குப் பாலை வாங்கிக்கொண்டு தங்களது பாலை எடுக்காமல் திருப்பி அனுப்புவதாகவும் கால்நடை வளர்ப்பவர்கள் புகார் கூறுகின்றனர். 

இந்நிலையில் பால் கொள்முதல் செய்யாத ஆவின் நிறுவனத்தைக் கண்டித்து ஆண்டிபட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் பாலை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டத்தில் மூன்று கிராமங்களைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்கள் கலந்துகொண்டனர். பாலை கீழே கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.