மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜூன் 12 முதல் செங்கல்பட்டு - திருச்சி, அரக்கோணம் - கோவைக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே

ஜூன் 12-ம் தேதி முதல் செங்கல்பட்டில் இருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image
Updated On :9 ஜூன் 2020, 11:11 am


சென்னை: ஜூன் 12-ம் தேதி முதல் செங்கல்பட்டில் இருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில் தினந்தோறும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

செங்கல்பட்டில் இருந்து விழுப்புரம், கும்பகோணம் வழியாக இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும், ஜூன் 12-ம் முதல் இயக்கப்படும் இந்த ரயில் மேல்மருவத்தூர், விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், தஞ்சை, மயிலாடுதுறை, கும்பகோணம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட்டு, திருச்சிக்கு இரவு 8.10க்கு வந்தடையும். மறுமார்க்கத்தில் திருச்சியில் இருந்து காலை 6.30க்கு புறப்பட்டு செங்கல்பட்டுக்கு பகல் 12.40க்கு வந்தடையும்.

மேலும், ஒரு சிறப்பு ரயில் திருச்சி - செங்கல்பட்டுக்கு இயக்கப்படுகிறது. இது அரியலூர், விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.

திருச்சியில் இருந்து அரியலூர், விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து காலை 7 மணிக்குப் புறப்பட்டு முற்பகல் 11.30க்கு செங்கல்பட்டு வந்தடையும். செங்கல்பட்டில் இருந்து 4.45 மணிக்குப் புறப்பட்டு இரவு 9 மணிக்கு திருச்சியை வந்தடையும்.

இதுபோல ஜூன் 12 முதல் அரக்கோணத்தில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில் தினந்தோறும் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் அரக்கோணத்தில் இருந்து காலை 7 மணிக்குப் புறப்பட்டு, கோவைக்கு பிற்பகல் 2.05 மணிக்கும், மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து 3.15 மணிக்குப் புறப்பட்டு, அரக்கோணத்துக்கு இரவு 10 மணிக்கும் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது பரவலாக ரயில் சேவை தொடங்கப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.