தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி அருகில் கொட்டமலைக்காடு பகுதியில் வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் பாலத்திலிருந்து ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
காயல்பட்டினம் சீதக்காதி நகரைச் சேர்ந்த பீர்முகம்மது மகன் வருசை முகம்மது.18 வயதான இவர் இங்குள்ள கார் சர்வீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவர் வெள்ளிக்கிழமை மாலை நண்பர்களுடன் ஆறுமுகனேரி அருகிலுள்ள கொட்டமலைக்காடு பகுதியில் தாமிரபரணி ஆறும் கடலும் சேருமிடத்தில் உள்ள பாலம் மீது நின்று மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக வருசைமுகம்மது நிலைதடுமாறி ஆற்றில் விழுந்து விட்டார். ஆறும் கடலும் சேரும் பகுதி என்பதால் நீர் சுழற்சி காரணமாகத் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். இளைஞர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினரின் உதவியால் வருசைமுகம்மது உடல் மூன்று மணி நேரம் கழித்து மீட்கப்பட்டது. ஆறுமுகனேரி ஆய்வாளர் சாந்தி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


