செங்கல்பட்டில் மேலும் 63 பேருக்குத் தொற்று: பாதிப்பு 3,171 ஆக உயர்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 63 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 63 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
முன்னதாக, நேற்று 88 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு 3,108 இருந்த நிலையில், இன்று மேலும் 63 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதுவரை மொத்தம் 3,171 பேர் நோய்த் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இந்தநிலையில், மாவட்டத்தில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இ-பாஸ் இருந்தால் மட்டுமே மக்கள் மாவட்ட எல்லையை விட்டு வெளியேற அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...