கூத்தாநல்லூர் வட்டத்தில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார் மாவட்ட ஆட்சியர்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்ட ஆறுகளில் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் புதன்கிழமை நேரில் பார்வையிட்டார். 
கூத்தாநல்லூர் வட்டத்தில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார் மாவட்ட ஆட்சியர்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்ட ஆறுகளில் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் புதன்கிழமை நேரில் பார்வையிட்டார். 

கூத்தாநல்லூர் வட்டம், குடிதாங்கிச்சேரி பாலம், கோரையாற்றில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆனந்த், சுட்டெரிக்கும் வெயிலில், குடைபிடித்தபடி, ஆற்றில் இறங்கி, தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டு, பணிகளின் தரம், தூர் வாரப்பட்டுள்ள அளவீடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். 

அப்போது, மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் பத்திரிகையாளர்களிடம் கூறியது..

திருவாரூர் மாவட்டத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் அறிவிக்கப்பட்ட சிறப்பு தூர்வாரும் திட்டப்பணிகளான ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களின் தள மட்டங்களில் உள்ள மண் திட்டுக்களை அகற்றுதல், தூர்வாருதல், சமப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. 

அதனடிப்படையில், சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ், 106 பணிகள் எடுக்கப்பட்டது. அதில், 1244 கி.மீ. தூரத்திற்கு தூர் வாருவதற்கு திட்டமிடப்பட்டது. இதுவரை, 1209 கி.மீ. தூரம் தூர்வாரப்பட்டுள்ளன. மீதியுள்ள 35 கி.மீ. தூரம் தூர்வாரப்பட்டு, விரைந்து பணிகள் முடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஆய்வின் போது, திருவாரூர் வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் முருகுவேந்தன் மற்றும் உதவிப் பொறியாளர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com