தஞ்சாவூர் கல்லணைக் கால்வாயில் வியாழக்கிழமை பிற்பகல் காவிரி நீர் வந்தடைந்தது.
மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காகக் கல்லணையும் ஜூன் 16-ம் தேதி திறக்கப்பட்டது.
வெண்ணாற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் தஞ்சாவூருக்கு புதன்கிழமை மாலை வந்தடைந்தது. காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் திருவையாற்றுக்கு வியாழக்கிழமை காலை வந்தது.
கல்லணைக் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் தஞ்சாவூருக்கு வியாழக்கிழமை பிற்பகல் வந்தது. இதனிடையே தஞ்சாவூர் சீனிவாசபுரத்தில் கல்லணைக் கால்வாயில் முற்பகலில் வந்த தண்ணீரை பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி, மலர் தூவி வழிபட்டனர்.
கல்லணையிலிருந்து கல்லணைக் கால்வாயில் புதன்கிழமை வரை விநாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், வியாழக்கிழமை காலை விநாடிக்கு 1,011 கன அடி வீதம் திறந்துவிடப்படுகிறது.
இதேபோல காவிரியில் விநாடிக்கு 3,262 கன அடி வீதமும், வெண்ணாற்றில் விநாடிக்கு 3,275 கன அடி வீதமும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


