கூத்தாநல்லூர்: வடபாதிமங்கலத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தும் நிலையில் மின்சார டிரான்ஸ்பார்ம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், வடபாதிமங்கலத்தில், உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில், ஆபத்தான நிலையில் மின்சார டிரான்ஸ்பார்ம் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். 
கூத்தாநல்லூர்: வடபாதிமங்கலத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தும் நிலையில் மின்சார டிரான்ஸ்பார்ம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், வடபாதிமங்கலத்தில், உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில், ஆபத்தான நிலையில் மின்சார டிரான்ஸ்பார்ம் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

வடபாதிமங்கலம் பிர்காவில், கூத்தாநல்லூர் - வடபாதிமங்கலம் பிரதான சாலை வால் பட்டறை என்ற இடத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 100 கிலோ வோல்ட் கொண்ட இந்த மின்மாற்றியிலிருந்து, கீழ உச்சிவாடி, திட்டச்சேரி, அரிச்சந்திரபுரம் பள்ளிக்கூடம் தெரு, காமராஜர் தெரு உள்ளிட்ட தெருக்களில் 300க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும், அப்பகுதியில் உள்ள தெருவிளக்குகளுக்கும் மின்சப்ளை செல்கின்றது. 

மேலும், கீழஉச்சிவாடி, திட்டச்சேரி, வால்பட்டறைத் தெரு உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலைக் குடிநீர் தொட்டிகளுக்கும், இந்த மின்மாற்றியிலிருந்து தான் மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. சிமிண்ட்டால் ஆன இந்த மின்சார கம்பத்தில், அடிப்பாகத்திலிருந்து, மின்மாற்றி பொருத்தியிருக்கின்ற மேல் பகுதி வரையிலும், சிமிண்ட் பெயர்ந்துள்ளது. 

மின் கம்பங்கள் முறிந்து, டிரான்ஸ்பார்ம் எந்த நேரத்திலும் சாய்ந்து விடக் கூடிய ஆபத்தான நிலையில் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீசப்பட்ட கஜா புயலில், சிறிது சாய்ந்துள்ளது. மின் கம்பங்கள்  தார்ச்சாலையின் பிடிமானத்தில்தான் உள்ளது. இந்த மின் கம்பத்தின் அருகே பேருந்து நிறுத்தகம் உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வயதானவர்கள் என தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் மன்னார்குடி, வடபாதிமங்கலம், திருவாரூர், கும்பகோணம் உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்பவர்கள் இந்த பேருந்து நிறுத்தகத்தில் நின்றுதான் செல்ல வேண்டும்.

தற்போது கரோனா காலம் என்பதால், பேருந்து நிறுத்தகத்துக்கு வருபவர்கள் குறைவாக உள்ளது. கஜா புயலில் கடுமையாக உழைத்த மின்சார ஊழியர்கள், உடனே, போர்க்கால அடிப்படையில், இந்த மின்கம்பங்களை மாற்றியமைத்து, உயிரிழப்புகளைத் தவிர்க்க வேண்டும். 

இதுகுறித்து வடபாதிமங்கலம் போர்மேன் சரவணன் கூறியது. 
மின்கம்பம் கொண்டு வந்து  போடப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் டிரான்ஸ்பார்ம் மாற்றியமைக்கப்படும் என்றார். 

அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி கூறியது.
டிரான்ஸ்பார்ம் எதிரே போடப்பட்டுள்ள இரண்டு மின்கம்பங்களும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்து போடப்பட்டது. அப்படியே கிடக்கிறது. இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெரும் உயிரிழப்பு ஏற்படும் முன்பே புதிய மின் கம்பங்களை ஏற்படுத்தி, மின்மாற்றியைப் பொருத்த வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com