தமிழக கேரளா எல்லையில் கம்பம்மெட்டு சுகாதார சோதனைச்சாவடி அகற்றம்

தமிழக கேரளா எல்லையில் உள்ள தேனி மாவட்ட கம்பம்மெட்டு மலை அடிவாரத்தில் உள்ள சோதனைச் சாவடி அகற்றப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 
தமிழக கேரளா எல்லையில் கம்பம்மெட்டு சுகாதார சோதனைச்சாவடி அகற்றம்


தமிழக கேரளா எல்லையில் உள்ள தேனி மாவட்ட கம்பம்மெட்டு மலை அடிவாரத்தில் உள்ள சோதனைச் சாவடி அகற்றப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

தமிழகத்திலிருந்து கேரளா செல்ல தேனி மாவட்டம் வழியாக போடி மெட்டு கம்பம் மெட்டு லோயர் கேம்ப் ஆகிய மூன்று மலைகள் உள்ளன. குருநாத் தொற்று காரணமாக கம்பம் வழியாக சரக்கு வாகனங்கள் மற்றும் வழியாக பயணிகள் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது. அதே நேரத்தில் மூன்று எல்லை சோதனைச் சாவடிகளிலும் காவல், வனம், சுகாதாரம் மற்றும் வருவாய் துறையினர் சோதனை சாவடி அமைத்து இரவு பகலாக பணியாற்றினர்.

கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் பயணிகள் ஆகியோரை மருத்துவ பரிசோதனை செய்து மாதிரிகள் எடுத்து லோயர் கேம்பில் உள்ள முகாமில் தங்க வைத்து அனுப்பி வைத்து வருகின்றனர். 

அதே நேரத்தில் கம்பம்மெட்டு போடிமெட்டு பகுதிகளில் வரும் பயணிகளை அருகில் வைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்களில் தங்க வைத்து மாதிரிகள் எடுத்து அனுப்பி வைத்து வந்தனர். இந்த நிலையில்  கம்பத்தில் இருந்து கேரளா செல்லும் கம்பம்மெட்டு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வருவாய் மற்றும் சுகாதாரத்துறை சோதனைச் சாவடி வெள்ளிக்கிழமை திடீரென்று அகற்றப்பட்டது.

இதுபற்றி மருத்துவ அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, தேனி மாவட்டம் கம்பம் மெட்டு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுகாதாரத்துறை சோதனைச்சவடி லோயர் கேம்ப் மருத்துவ முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளது. காரணம் கம்பத்தில் இருந்து கம்பம் மெட்டு மலைச்சாலை ஒருவழி சாலையாக மாற்றப்பட்டு தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படும். திரும்ப இந்த சாலை வழியாக வருவதற்கு அனுமதிக்கப்படமட்டார்கள். மேலும் குமுளி லோயர் கேம்ப் சோதனைச்சாவடியில் கூடுதல் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார். அதே நேரத்தில் கம்பம்மெட்டு மலை அடிவாரத்தில் காவல் துறையினர் சோதனை சாவடி அமைத்து வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். 

இது பற்றி காவல்துறையினர் கூறும்போது வாகனங்கள் கேரளாவிலிருந்து கம்பம்மெட்டு வழியாக கம்பம் நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. வாகனத்தில் வருபவர்கள் மருத்துவ பரிசோதனை செய்யாமல் செல்கின்றனர். இதனால் காவல்துறை சோதனைச் சாவடியில் பணியாற்றும் காவல்துறையினருக்கு கரோனா தொற்று பரவும் அபாய அச்சத்தில் உள்ளனர் என்றார்.

இப்பகுதி மக்கள் கூறும் போது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்துத் தொற்று பரவும் அபாயத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com