மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ராகுல்காந்தி பிறந்தநாள் விழா: சங்ககிரியில் 250 விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கல்

சங்ககிரியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் 50வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:49 pm

DIN

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் 50வது பிறந்தநாளையொட்டி சேலம் மேற்கு மாவட்ட ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் சார்பில் சங்ககிரியை அடுத்த ஐவேலி கிராமம், மாவெளிபாளையம், வயக்காடு பகுதியில் வயல்வெளியில் எளிய முறையில் பிறந்தநாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றன. 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 50வது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற விழாவிற்கு  சேலம் மேற்கு மாவட்ட ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.எஸ்.ஜெய்க்குமார் தலைமை வகித்து சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட 250 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை இலவசமாக வழங்கினார்.  

சங்ககிரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ்  நிர்வாகிகள் பி சி மணி, நடராஜன், காசிலிங்கம், ராமமூர்த்தி, ரவி, சுப்ரமணி, செங்கோட்டுவேல், வழக்குரைஞர் மணிசங்கர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சிக்கு முன்னதாக கிழக்கு லடாக்கில் இந்திய}சீன ராணுவங்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததையொட்டி அவர்களுக்கு சேலம் மேற்கு மாவட்ட ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தலைமையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.