மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு முதியவர் பலி

திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 70 வயது முதியவர் உயிரிழந்தார்.

News image

திருச்சி அரசு மருத்துவமனை

Updated On :24 ஜூன் 2020, 12:46 pm

திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 70 வயது முதியவர் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உறவினர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி இ.பி.சாலையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 

இந்தநிலையில், இவர்களில் 70 வயது முதியவர் புதன்கிழமை பிற்பகல் உயிரிழந்தார். இதையடுத்து, உடன் இருந்த உறவினர்களான கரோனா தொற்றாளர்கள் ரகளையில் ஈடுபட்டனர். தங்களை வீட்டுக்கு அனுப்பவும் கோரி வாக்குவாதம் செய்து, மருத்துவமனை வார்டிலிருந்த ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்ததாகக் கூறப்படுகிறது. 

ரகளையில் ஈடுபட்டவர்கள் கரோனா தொற்றாளர்கள் என்பதால் உடனடியாக காவல்துறையினர் சென்று அவர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், அந்த வார்டிலிருந்த பாதுகாப்பு உடை அணிந்த காவலர்கள் அவர்களைக் கட்டுப்படுத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.